Home » , » சுத்த தங்கம் எது? போலி தங்கம் எது?

சுத்த தங்கம் எது? போலி தங்கம் எது?

சுத்த தங்கம் எது? போலி தங்கம் எது?


வேதாகமம் அல்லது குர்ஆன் இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்கமுடியும், இவை இரண்டில் ஒன்று சுத்த தங்கம். மற்றொன்று போலி. ஆனால் உண்மை மார்க்கம் எது? உண்மை வேதம் எது? என்ற வினாவுடன் சத்திய உண்மைகளைத் தேடுகின்ற இதயங்களுக்கு இறைவன் சரியான மார்க்கத்தை காண்பிக்க வல்லவனாகவே இருக்கின்றான்.


மெய் மார்க்கத்தை அறிய விரும்பும் என் அன்பு நண்பரே,
சகல அண்டசராசரங்களையும் படைத்த இறைவனிடம் முதலில் உன் பிரார்த்தனையை பின்வருமாறு ஏறெடுத்தபின் அதனைக் குறித்து நீர் ஆராய்ந்து அறிய முற்படுவீராக. ஏனென்றால் இறைவன் தமது வழியை உனக்கு காண்பிக்காவிட்டால், நான் என்னதான் கூறினாலும் அதனால் பயனில்லை. எல்லாம் வல்ல இறைவன் உனக்கு சத்திய வழியைக் காண்பிப்பார். ஆகவே முதலில் நீர் உளமாற பிரார்த்தனை செய்வீராக.

“எல்லாம் வல்ல இறைவா, நீரே இந்த வானத்தையும் பூமியையும் நான் காண்கின்றவைகளையும் காணாதவைகளையும் படைத்தவர். நீரே எல்லாம் வல்ல மெய்யான தெய்வம். உம்மை நான் யார் என்று அறிய ஆவலுடன் இருக்கின்றேன். என் கண்களைத் திறந்தருளும். மெய்யான தெய்வமாகிய உம்மையும் நீர் தந்துள்ள மெய் மார்க்கத்தையும் அறியும் அறிவை தந்தரும். ஏனென்றால் ஆபிரகாம், மோசே மற்றும் யாக்கோபின் தேவனே நீர் ஒருவரே. தொடக்கமும் முடிவும் இல்லாதவர் நீர் ஒருவரே. நீரே உண்மையுள்ளவர், நீர் ஒருவரே சத்தியமுள்ளவர், நீரே ஒரே ஒரு மெய்யான வேதத்தை உருவாக்கினீர். உமது சத்தியத்தை அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன், எனது வாழ்வில் உமது நோக்கத்தை நிறைவேற்ற ஆவலாய் இருக்கிறேன், உமது அன்பைப் பெற வாஞ்சிக்கிறேன், உம்மை அறிந்துகொள்ள ஆசிக்கின்றேன். சத்தியத்தின் பெயராலே. ஆமேன்"

நண்பரே, சத்தியத்தின் பெயரால் பிரார்த்தனையை ஏறெடுத்த உமக்கு மெய்யான மார்க்கத்தைக் காண்பிக்க விரும்புகின்றேன். சுத்த தங்கம் எது? போலி தங்கம் எது என்பதைக் குறித்த உமது தெரிவை உமது கைகளிலேயே விட்டுவிடுகின்றேன். உமக்கு எது உண்மை என்று தெரிகின்றதோ அதனை தெரிவுசெய்வது உமது கைகளில்தான் இருக்கின்றது.

நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையான தங்கமான சத்திய வேதாகமம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அது என்ன கூறுகின்றது என்பதைக் கவனித்து பாருங்கள்.

சங்கீதம் 19:7 ‘கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.’
சங்கீதம் 119:92 ‘உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.’
ஏசாயா 51:4 ‘என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள். என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள். வேதம் என்னிலிருந்து வெளிப்படும்.’
கலாத்தியர் 3:8 ‘மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.’
கலாத்தியர் 4:30 ‘அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.’

ஆகவே சத்திய வேதாகமம் ஒன்றே புனிதமானது. அது குர்ஆனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஏனென்றால், அது ஒன்று மட்டுமே குர்ஆனுக்கு முன்னரும் இருந்தது. பின்னரும் இருப்பது. அது மாறாத வாக்கு. சத்திய வேதாகமமே சுயாதீனமுள்ளது. அதில் அடிமைத்தனம் இல்லை.

ஏசாயா 34:16 ‘கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள். இவைகளில் ஒன்றும் குறையாது. இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது. அவருடைய வாய் இதைச் சொல்லிற்று. அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.’ என புனித வேதாகமத்தை இறைவன் உறுதிப்படுத்தியுள்ளார்.

உங்களுக்கு போலியானதை வைத்துக்கொள்ள விருப்பமில்லை என்பது எனக்குத் தெரியும். உலகத்தில் எத்தனையோ போலியான மதங்களை காண்கின்றீர்களே, அவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். அதனால் எவ்வித பிரயோசனமும் இல்லை. ஏனென்றால் நூற்றுக்கு நூறு சதவீதமான சுத்த தங்கத்திற்கு நிகர் எதுதான் சொல்லுங்கள்.

“குர்ஆனில் விஞ்ஞான அதிசயம் என நம்பப்பட்ட அனைத்தும் ஏற்கனவே பைபிளில் இருக்கிறது. ஒரு எழுத்துகூட மாறாமல் எவ்வாறு பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவந்துள்ளன என்பதை நான் ஆராய்ந்தபோது தேவன் எனக்கு விளக்கி காண்பித்தார். எந்த ஒரு மனிதனாலும் தவறே இல்லாமல் இதைப்போல எதிர்கால நிகழ்வுகளை அறுதியிட்டு கூற முடியாது. தேவனால் மாத்திரம் தான் எதிர்கால் நிகழ்வுகளின் கதவுகளை திறக்க முடியும், பைபிள் தான் அதற்கு திறவுகோல் குர்ஆன் அல்ல. ஏன் என்றால் மீட்பு, இரட்சிப்பு குறித்து எந்த வகையிலும் குர்ஆன் விளக்குவது இல்லை. ஆகவே தான் இவ்வளவு காலமாக முட்டாள்த்தனமாக வேறு ஒரு கடவுளை வணங்கி வந்திருக்கிறேன் என அறிந்துகொண்டேன். இறைவன் எப்படியாவது என்னை குர்ஆனின் மூலமாக வழி நடத்தி செல்வார் என நினைத்திருந்தேன். ஆனால் அது வேறு விதமாக முடிந்தது. எனது பெருமைகளை விட்டுவிட்டு திறந்த மனதோடு சத்தியத்தை அறிந்து கொள்ள ஆவலானேன். அவ்வளவு ஏன் முகமதுவின் மரணம் கூட இயேசுவின் மரணத்தை விட வித்தியாசமாக இருந்தது. முகமது தனது பிரியமான மனைவியான ஆயிஷாவின் மடியில் உயிர் நீத்தார். ஆனால் இயேசுவோ மனுக்குலத்தின் பாவத்தை பரிகரிக்க சிலுவையில் உயிர் துறந்தார்.” மேலும் “பகையாளி தன்னை பகைப்பவனுக்காக மரிப்பதைப்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. தன்னை அடிக்கப்படுவதற்கும், துப்பப்படுவதற்கும் சிலுவையில் அறையப்படுவதற்கும் அவர் தன்னை ஒப்புக்கொடுத்தார், உனது பகையாளி உனக்காக மரிக்கக் கூடுமோ? இருப்பினும் இயேசு இவ்வாறு சொன்னார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44) சத்தியம் என் கண்களுக்கு முன்பாக இருந்தது, எனது இதயத்தின் கதவுகளை அது தட்டிக்கொண்டேயிருந்தது, அது உள்ளே வர விரும்பியது. அந்த சத்தியத்தை நான் அழைத்தேன், தேவன் பதில் கொடுத்தார், குருடனாயிருந்து சத்தியத்தை தேடினேன், இப்போது பார்க்கிறேன். அவர் எனது கதவை தட்டினார், நான் திறந்தேன் அவர் என்னை விடுதலையாக்கினார். ஆம், சுத்த தங்கம் யார் என்பதை அறிந்துகொண்டேன். அவர் பின்வருமாறு கூறினார், “அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6) உண்மையில் சத்தியத்தைக் கண்டுகொண்ட பின்னர் எனது உணர்வுகள், நோக்கங்கள், சிந்தனைகள் அனைத்தும் மாறின. இதை தைரியமாக நான் கூறுகிறேன்.” என்பதாக சொக்க தங்கத்தை (புனித வேதாகமம், இறைவனாகிய இயேசு யார் என்பதைப் பற்றி) தான் கண்டு கொண்டதை ஒரு மெய்யான ஒரு இஸ்லாமிய நண்பர் தனது தளத்தில் எழுதுகின்றார்.

பைபிளிலும் குர்‍ஆனிலும் வாலித் அவர்கள் செய்த ஆராய்ச்சி கட்டுரைகளை படியுங்கள். Source:
http://www.answering-islam.org/Testimonies/walid.html , http://www.isakoran.blogspot.com
இயேசு தான் மேசியா(மஸிஹா) என்றும், புனித வேதாகமமே மெய்யான நூல் என்றும் இதற்குமேல் நான் கூறி தெரியவேண்டியதில்லை. சத்திய வேதாகமத்தை வாசிப்பீர். உண்மை எது என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்வீரா? சத்திய வேதாகமமான பைபிளே சிறிதும் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் உண்மையான சொக்கத்தங்கம் என்பதை நானும் ஆணித்தரமாக உங்கள் முன்வைத்து விட்டேன். இதற்குமேலும் உண்மையை அறிய ஆராய்வீர். மெய் மார்க்கத்தைத் தேடி கண்டுபிடிப்பீராக.

சத்திய வேதாகமம் பின்வருமாறு கூறுகின்றது : யோசுவா 1:8 இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.
கடைசியாக ஒரு எச்சரிக்கை: (இதனையும் நான் கூறித்தான் ஆகவேண்டும்.)
உபாகமமம் 28:58 ‘உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால்,’
உபாகமமம் 29:20 ‘அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும். இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும். கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்’
உபாகமம் 30:10 ‘உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும் போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவேடும் திரும்பும் போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.’

ஆகவே என் நண்பர்களே, மறுபடியும் கூறுகின்றேன்,
ஏசாயா 34:16 ‘கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள். இவைகளில் ஒன்றும் குறையாது. இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது. அவருடைய வாய் இதைச் சொல்லிற்று. அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.’


புனித வேதாகமமே இறைவனால் கொடுக்கப்பட்ட சுத்த தங்கம்.
அதனை தினமும் வாசி. அனுதினமும் யோசி. அதனால் நீ பெறுவாய் சுக-வாசி.

வெளிப்படுத்தின விசேஷம் 22:7 ‘இதோ, சீக்கிரமாய் வருகிறேன். இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.’ ஆம், இதுவே உண்மை. கர்த்தராகிய இயேசுவே நீர் வாரும்.

இதுவரை பொறுமையாக வாசித்த உங்களுக்கு மிக்க நன்றி.
கடைசியாக ஒரு சிறு பிரார்த்தனை.


“எல்லாம் வல்ல இறைவனே, நீர் உமது அடியார்களின் ஊடாக எமக்கு அருளின புனித வேதாகமத்திற்காக நாம் உமக்கு நன்றியை ஏறெடுக்கின்றோம். சத்தியத்தை அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்ற உமது புனித வேதாகம அருள்வாக்கின்படி எங்களுடைய அறிவு கண்களைத் திறந்தருளுவீராக. மெய்யாகவே எங்கள் உள்ளங்களில் சத்தியத்தை அறிகிற அறிவைத் தந்தருளும். வேதத்தை வாசிக்க மன உறுதியைத் தந்தருளும். சத்தியத்தின் பெயராலே. ஆமென்.”
Share this article :

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்