Home » , » பிர் அவ்னின் ( பார்வோனின் ) உடலும் குர்-ஆன் உம்

பிர் அவ்னின் ( பார்வோனின் ) உடலும் குர்-ஆன் உம்

அண்மைக் காலமாக குரான் ஒரு இறை வேதம் தான் என்பதை நிரூபிப்பதற்கு ஆதாரமாக இஸ்லாமியர்கள் ”பிர் அவ்ன்” என்னும் இரண்டாம் ராமஸேஸ் மன்னனின் உடல் என அடையாளம் காணப்பட்டுள்ள உடல் ஒன்றை தங்கள் வேதத்தோடு ஒப்பிடுகின்றனர்.

எப்படியெனில் இஸ்ரவேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பார்வோன் மன்னனைக் குறித்து வேதாகமத்தில் யாத்திராகமம் புத்தகத்தில் 14ம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.


மோசேயினால் (மூஸா) பார்வோனின் (பிர் அவ்ன்)  அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் கானான் நோக்கி பயணம் செய்கின்றனர். அப்போது அவர்களின் வழியை செங்கடல் தடை செய்கின்றது. பின்னால் பார்வோனின் சேனை, முன்னால் செங்கடல். மக்கள் திகைத்து நிற்கும் வேளை கடவுள் செங்கடலை இரண்டாக பிளக்கிறார். கடலின் பிளவூடாக மக்கள் தப்பிச் செல்ல அவர்களை பின் தொடர்ந்து வந்த பார்வோனின் சேனை கடலில் மூழ்கி இறந்ததாக வேதாகமம் கூறுகின்றது. இதே சம்பவம் குரானில் பிரதி செய்யப்படும் போது கொஞசம் அதிகப்படியாக ஒரு விடயம் சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது பார்வோன் அச்சமயம் கடலில் மூழ்கி இறப்பதாகவும் பின் சந்ததியாருக்கு அத்தாட்சியாக அவனது உடலை இறைவன் பாதுகாக்க போவதாக கூறுவதாகவும் எழுதப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்கவைத்தோம்அப்போது பிர் அவ்னும் அவனது படையினரும் கொடுமையும்பகைமையும் கொண்டு அவர்களை பின்தொடர்ந்தார்கள்அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நானும் ஈமான் வைக்கிறேன்இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவனாக இருக்கிறேன் என்றும் கூறினான்.
இந்த நேரத்தில் தானாசற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய்இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்” குரான் 10: 90,91,92

அன்மைக்காலங்களில்  எகிப்தின் நைல் நதி பள்ளத்தாக்கு ஒன்றில் ஒரு  பழங்கால உடல்  கண்டெடுக்கப்படுகிறது.  ஆய்வுகளுக்குப்  பின்னர்  அது  பண்டைய மன்னனான இரண்டாம் ரமோஸஸ் என்பவனின் உடல் தான்  அது என கண்டறியப்பட்டு தற்போது கெய்ரோவிலுள்ள ராயல் மம்மி எனும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறதுகுரானில் குறிப்பிடப்படும் பிர் அவ்னின் உடல்தான் அதுஇறைவன் தான் வாக்களித்தபடி பிர் அவ்னின் உடலை கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைத்துள்ளார் என முஸ்லிம் நண்பர்கள் கூறுகின்றனர்.

பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக அந்த உடலை பாதுகாப்போம் என்று இறைவன் கூறியதாக  பார்வோனின்  கதை  நடந்து  1900  ஆண்டுகளுக்கு  பிறகு  முகம்மது சொல்கிறார்.  பார்வோனின் பின் அந்த 1900 ஆண்டுகள் வரை வாழ்ந்த மக்களுக்கு அத்தாட்சியாக ஏன் இறைவன் அந்த உடலை காட்டவில்லை? சரி அது போகட்டும் இஸ்லாமியர்கள் அந்த பார்வோனின் உடல் (இரண்டாம்  ராமஸேஸ்  மம்மி ) 1898ம்  ஆண்டு  கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அதை உண்மை என எடுத்தாலும் பின்னுள்ளவர்களுக்கு  அத்தாட்சியாக  அந்த  உடலை பாதுகாப்போம் என்று கூறிய இறைவன் பார்வோன் இறந்தது முதல் கிபி-1898 வரையான மக்களுக்கு அத்தாட்சியாக ஏன் அந்த உடலை காட்டவில்லை?

இப்படிக் கேட்டவுடன் முஸ்லிம்கள் சொல்வது…


உடலை பாதுகாத்து வைக்கும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு தெரியும் காலம் வரும் வரை இறைவனே அவ்வுடலை பாதுகாத்து வைத்து உடலை பாதுகாத்து வைக்கும் தொழில் நுட்பம் கண்டு பிடிக்க பட்ட பின்னரே அதை  வெளிப்படுத்தி காட்டியுள்ளான். ஆரம்பத்திலேயே அந்த சடலத்தை வெளிப்படுத்தியிருந்தால் மனிதர்களால் அதை பாதுகாத்து வைக்கமுடியாமல் போயிருக்கும். இவ்வாறு குரான்  இறைவனின்  வார்த்தை  தான்  என்பதை  ஐயம்  திரிபற  மெய்ப்பித்து விட்டான் என்கிறார்கள்.


ஆரம்பத்திலேயே அந்த சடலத்தை வெளிப்படுத்தியிருந்தால் மனிதர்களால் அதை பாதுகாத்து வைக்கமுடியாமல் போயிருக்கும்  என்பது தவறானது.  ஏனென்றால் செத்த உடல்களை  மம்மிகளாக  பதப்படுத்தி  வைப்பதை  மனிதர்கள்  பல  ஆயிரம்  ஆண்டுகளாகவே செய்துவருகின்றனர்அவர்கள் பதப்படுத்திய உடலும்  இன்று வரை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

அடுத்து இவ்வுடல் இயற்றையாக பாதுகாக்க பட்டதல்ல. ஏனெனில் எகிப்தின் அன்றைய காலகட்டத்தை மூன்றாக பிரிக்கலாம்கிமு 2950லிருந்து கிமு 2150வரையான முதல் காலம்இந்த காலத்தில்தான் மன்னர் குடும்பத்தினரின் உடலை மம்மியாக பதப்படுத்திவைக்கும் முறை தொடங்குகிறதுஇந்த மன்னர்களின் மம்மிகள் புதையல் திருடர்களால் சிதைக்கப்பட்டுவிட்டனகிமு 2150லிருந்து கிமு 1500 வரையான இரண்டாம் காலம்இந்தக்காலத்தில் முறையான அரசமைப்பு இன்றி குழப்பமான நிலை நிலவியதுகிமு 1500லிருந்து கிமு 1000வரையிலான மூன்றாவது காலகட்டத்தில்  எகிப்தை ஆண்டமன்னர்களின் மம்மிகள் அனைத்தும் செயற்கையான முறையில் பாதுகாக்கப்பட்ட ன. இவைகளில்  அதிகம்  சிதையாமல்  கிடைத்திருப்பது  இரண்டாம் ரமோஸஸ் மம்மிதான்.

மதவாதிகள் இரண்டாம் ரமோஸஸ் மம்மி 1898ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்இரண்டாம் ரமோஸஸ் மம்மி கெய்ரோ அருங்காட்சியகத்தில் இருக்கும் புகைப்படத்தைத்தான் தங்கள் பரப்புரைகளுக்கு பயன்படுத்துகின்றனர்ஆனால் 1898ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டவைகள் இரண்டு உடல்கள்அமேன்கொதப்மேர்நெப்தா ஆகிய இரண்டு மம்மிகள் அந்த ஆண்டில் கண்டெடுக்கப்பட்டனஇரண்டாம் ரமோஸஸ் கண்டெடுக்கப்பட்ட ஆண்டு 1881. இரண்டாம் ரமோஸஸ் கிமு 1279ல் ஆட்சியேறி 67 ஆண்டுகள் ஆட்சி புரிந்து கிமு 1213ல் தனது 90ஆவது வயதில் மூட்டு வலியால் அவதியுற்று மரணமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மாரிஸ் புகைல் என்றொரு பிரஞ்சு மருத்துவர்சவூதி அரசரின் தனி மருத்துவராக பணியாற்றியவர்குரானின் அறிவியல் பார்வை என்ற நூலை எழுதியவர்இவர் எகிப்து அரசின் அனுமதியுடன் மேர்நெப்தாவின் மம்மியை ஆராய்ந்தார்ஆராய்ந்து இது நீரில் மூழ்கி இறந்ததற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தார்அதற்கு அவர் கொடுத்த ஆதாரம் அந்த மம்மியில் உப்புத்தன்மை இருந்தது என்பது தான்ஆனால் உடலை மம்மியாக பதப்படுத்த நேட்ரான் எனும் உப்புதான் அந்தக்கால மக்களால்பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (தகவல்-செங்கொடி)


ஒட்சியின் உடல்   மேலும் ஒரு மனித  உடல்  மனிதனால் பத்திரப்படுத்தாமல் இயற்கையாக  பதப்படுத்தப்பட்டிருக்கிறது . முஸ்லிம்கள் இவ்வுடல் இயற்கையாக பாதுகாக்க பட்டுள்ளது என்று கூறுவதை உண்மை என்று கொண்டாலும் இதில் வியப்பதற்கு  ஒன்றுமில்லைஏனெனில் அண்மையில் ஆஸ்திரிய இத்தாலிய எல்லையில் உள்ள ஆல்ப்ஸ் மலையில்  ஒரு உடல் கண்டெ டுக்கப்பட்டுள்ளது. கார்பன் நிர்ணய முறையில் அவ்வுடல் கிமு3300க்கும் 3200க்கும் இடையில் வாழ்ந்த மனிதனுடையது என கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது.  அந்த உடல் ஆஸ்திரியாவிலுள்ள சவுத் டைரோல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளதுஅவ்வுடலுக்கு ஓட்சி(otzi) என்று பெயரளிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த உடலையும் இறைவன்தான் பாதுகாத்தானா? யாருக்கு அத்தாட்சியாக? எதற்காக?


இது நமக்கு எதை காட்டுகிறதென்றால் மனித உடல் இயற்றையாக பத்திரப்படுத்த படுவது ஒன்றும் அதிசயமில்லை.


----------------------------------தகவல்  செங்கொடி -------------------------
Share this article :

1 comments:

riyas said...

antha otzi ennum udal kulliraana idathil irunthirukirath aakaiyaal athu kettupookaamal irukirathu enpathu enathu karruthu

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்