Home » , , » உன் குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்

உன் குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்

வேதாகமத்தில் 137ம் சங்கீதம் 9ம்  வசனத்தில் உன் குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான் எனும் வசனம் உள்ளது.
இந்த வசனத்தின் அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் இவ்வசனத்தை மேற்கோள் காட்டி வேதாகமத்தை வசைபாடும் இஸ்லாமியர்களின் இம்சை தாங்க முடியவில்லை

வேதாகமத்தில் அகோரமான வசனம் ஒன்றை கண்டுபிடித்து விட்டார்களாம். ஒரு இறைவனின் வசனம் இப்படி கூறமுடியுமா? இறைவன் இவ்வளவு கொடுமையானவரா? என்று அறிவாளித்தனமான கேள்விகளை அவா்கள் கேட்கும் போது அதை நம்பிவிடும் அரைகுறை கிறிஸ்தவா்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவர்களுக்காகவே இச்சிறிய கட்டுரையை எழுதுகிறேன்.
    
வேதாகமத்தை பழித்துரைக்கும் இஸ்லாமியர்கள் ஒரு ஒற்றை வசனத்தை மட்டுமே மேற்கோள் காட்டும் போது அந்த வசனத்தின் முன்பின் இருக்கிற வசனங்களையும் கவனிக்கவேண்டும். அப்போது அவ் வசனத்தின் உண்மை நிலை புரிந்துவிடும். அப்படி புரியாவிட்டால் அந்த அதிகாரத்தை கவனிக்க வேண்டும். அவ் வசனம் கூறப்பட்ட காலம், பின்னணி, யாருக்கு கூறப்பட்டது யாரால் கூறப்பட்டது என்பதை ஆராய்ந்தால் உண்மை நிலையை தெளிவாக புரிந்துகொள்வீர்கள்.

சரி அவ்வசனத்திற்கு முதல் இருக்கிற இரண்டு வசனங்களை வாசிப்போம்

சங்கீதம் 137:7-9
7. கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

8. பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

9. உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

7ஆம் வசனத்தில் “கர்த்தாவே” என்று தொடங்கும் போதே தெரியவில்லையா இது கர்த்தர் பேசிய வார்த்தை இல்லையென்று?
மேலும் 8 ஆம் வசனத்தை வாசிக்கும் போது என்ன விளங்குகிறது? யாரோ பாதிக்கப்பட்டவா்கள் பேசுவது போல தெரியவில்லையா?

சரி இவ்வசனத்தின் சரித்திர பின்னணியை சொல்லிவிடுகிறேன்

இஸ்ரவேல் மக்களின் வரலாற்றில் இஸ்ரவேலின் தென் இராட்சியமான யூதாவை யோயாக்கீன் மன்னன் ஆளுகை செய்யும் காலத்தில் எரேமியா தீர்க்கதரிசியாக ஊழியம் செய்தார். அவரது முன் அறிவிப்பின் படி கி.மு 1597-1582 வரையான காலப்பகுதியில் பாபிலோன் மன்னனின் படைகள் தென் இராட்சியமான யூதாவை கைப்பற்றி யூத மக்களை அடிமைகளாக பாபிலோனுக்கு கொண்டுபோய் அவர்களை ஆண்டனர். அப்போது அங்கே அடிமைகளாயிருந்த யூதர்கள் எப்படிப்பட்ட மன நிலையிலிருந்தார்கள் என்பதை வெளிக்காட்டும் அவர்களின் புலம்பல் என்று சொல்லக்கூடிய ஒரு சங்கீதமே இந்த 137ம் சங்கீதம்.

இந்த சங்கீதத்தின் முழுமையான விளக்கத்தை தருகிறேன்.

இந்த விளக்கத்தை படித்த பின்னர் மீண்டுமொருமுறை இந்த பின்னணியை மனதில் கொண்டு இந்த சங்கீதத்தை முழுவதும் படித்துப் பாருங்கள் தெளிவடைவீர்கள்.
அடிமைகளாய் போன யூதர்கள் பாபிலோன் ஆறுகளருகே உட்கார்ந்து கொண்டு தங்கள் சொந்த நாட்டை நினைத்து அழுகின்றனர்.
சோகத்தின் மிகுதியால் வாத்தியங்களை வாசிப்பதை அவா்கள் நிறுத்தியிருந்தனர்.

அப்போது அவர்களை சிறைப்பிடித்தவர்கள் யூதர்களிடம் “உங்கள் பாடல்களை (கர்த்தரை பாடும் பாடல்களை) பாடிக்காட்டுங்கள்” என்று அவர்களை கிண்டல் செய்கிறார்கள்.

இதனால் வேதனையும் கோபமும் அடைந்த யூத மக்கள் தங்களை சிறைப்படித்து வந்தவா்கள் தங்களுடைய குழந்தைகளை கொன்று தங்களுக்கு அநியாயம் செய்தது போல அவர்களுக்கும் யாராவது செய்யமாட்டார்களா? என ஒரு ஆதங்கத்தில் பேசும் வார்த்தைகள் தான் இவை.
   
சரி இந்த பின்னணியை மனதில் வைத்து கொண்டு மீண்டுமொருமுறை இந்த சங்கீதத்தை வாசித்துப் பாருங்கள்.

137 ம் சங்கீதம்
1. பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.

2.
அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.

3.
எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.

4.
 கர்த்தரின் பாட்டை அந்நியதேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?

5.
எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.

6.
நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.

7.
 கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

8.
பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

9.
உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

---------------------------------------------by-Robert Dinesh-----------------------------------------

        
Share this article :

7 comments:

Anonymous said...

Nice info and explanation

Anonymous said...

Amen

Anonymous said...

Good

Anonymous said...

Excellent explanation. You are very good in this. Many people misinterpret the bible, especially Muslims, in order to degrade the Holy bible. They degrade themselves. Truth is truth.You can find, Love ❤, forgiveness of sins, Holiness, righteousness, transformed life, walking 🚶 with God, resurrection, everlasting life, common sense and peaceful life only in the bible, not in any other book on earth. Therefore the bible is translated in more than 1200 languages and spread all over the world. Because of Bible people are living in peace.

robert dinesh said...

thank u brothers and sisters....

EverGreen Offer said...

யூதர்கள் அக்கிரமம் இழைக்கப்பட்டார்கள் என்பது உன்மையாக இருந்தாலும்.. யூதன் தனக்கு இவ்வாறு செய்தர்களை பழிதீர்ப்பது என்பதனுடைய ஆதங்கத்தின் அவசர குமுரலாக இருந்தாலும் அவனுடைய குழந்தைகளை கொள்வது என்பது இந்திய அரசாங்கம் கூட அனுமதிக்காது.. தவறு செய்தவன் தான் தண்டனை அனுபவிக்க வேண்டுமே தரிவ.. எந்த பாவமும் அரியாத இலம் பிஞ்சுகள் இல்லை. சரி அது போகட்டும் அது வேதத்தில் எப்படி சொருகப்பட்டது. இறைவேதம் என்பது இறைவனுடைய வார்த்தைகள் மட்டும் தானே தவிர கண்டவன் புலம்பல்கலை பதிவு செய்ய அது ஒன்றும் முகனூல் புத்தகம் கிடையாது எப்படியாக இருப்பினும் மனிதனின் கரங்கள் விளையாடிய ஒரு புஸ்தகம்.. இதன் தூய்மை.. தனித்தன்மை அற்றுபோனது... இடை சொருகள்கலும்.. கூட்டலும்.. குரைத்தலும்.. உண்டானது..


நான் உனக்கு விதிக்கின்ற யாவையும் செய்யும்படி கவனமாயிரு! நீ அதனோடு கூட்டவும் வேண்டாம், குறைக்கவும் வேண்டாம்.

(உபாகமம் 12:32)

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டினால் அவர்உன்னைக் கடிந்து கொள்வார். நீ பொய்யானவனாவாய்.

(நீதிமொழிகள் 30:6

பைபிலின் வார்த்தைப்படி.. இதை செய்த கிறிஸ்தவ குருமார்கள் பொய்யர்கள்..

robert dinesh said...

சகோ EverGreen Offer தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ஆனால் இவை தவறான கருத்துக்கள்.

//////யூதர்கள் அக்கிரமம் இழைக்கப்பட்டார்கள் என்பது உன்மையாக இருந்தாலும்.. யூதன் தனக்கு இவ்வாறு செய்தர்களை பழிதீர்ப்பது என்பதனுடைய ஆதங்கத்தின் அவசர குமுரலாக இருந்தாலும் அவனுடைய குழந்தைகளை கொள்வது என்பது இந்திய அரசாங்கம் கூட அனுமதிக்காது.. //////
இந்திய அரசாங்கத்தின் கதை இங்கு நமக்கெதற்கு? இந்தியச்சட்டங்கள் இஸ்ரேலில் செல்லுபடியாகுமா? மைனர் வயதுடைய இஸ்லாமிய இலங்கைப் பெண் ஒருவரை சவுதி அரசு கழுத்தை வெட்டி கொன்றதே அதை உங்கள் இந்திய சட்டம் ஏற்றுக் கொள்கிறதா?

ஏதோ இந்திய அரசாங்கம் அனுமதித்தால் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்பது போல கூறுகிறீர்கள்?

அந்த காலத்தில் யூதர்களுடைய மனநிலை அப்படியிருந்தது என்பதைத்தான் இந்த சங்கீதம் நமக்கு காட்டுகிறது.//////தவறு செய்தவன் தான் தண்டனை அனுபவிக்க வேண்டுமே தரிவ.. எந்த பாவமும் அரியாத இலம் பிஞ்சுகள் இல்லை. சரி அது போகட்டும் அது வேதத்தில் எப்படி சொருகப்பட்டது. இறைவேதம் என்பது இறைவனுடைய வார்த்தைகள் மட்டும் தானே தவிர கண்டவன் புலம்பல்கலை பதிவு செய்ய அது ஒன்றும் முகனூல் புத்தகம் கிடையாது எப்படியாக இருப்பினும் மனிதனின் கரங்கள் விளையாடிய ஒரு புஸ்தகம்.. இதன் தூய்மை.. தனித்தன்மை அற்றுபோனது... இடை சொருகள்கலும்.. கூட்டலும்.. குரைத்தலும்.. உண்டானது..//////

வேதத்தில் எது இருக்க வேண்டும் எது இருக்க கூடாது என்பதை தீர்மானிப்பது கடவுள். அது உம்முடைய வேலை இல்லை. யூதர்கள் அன்று செய்தவையும் சொன்னவையும் தகுந்த காரணங்களுக்காக தேவனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது கூடாது என்று கூற நிங்கள் யார்?

இறைவனுடைய வார்த்தைகள் மட்டுமே இறை வேதத்தில் இருக்க வேண்டும் என்றால் அவ்வேதம் குரானைப் போல முழுமையற்ற வேதமாகத்தான் இருக்கும். இறைவனின் வார்த்தைகளுக்கு விளக்கத்தையும் பின்னணிகளையும் அறிய ஹதீசுகளை தேட வேண்டி ஏற்படும்.

வேதாகமம் அப்படிப்பட்டதல்ல. அது மனிதர்களின் பேச்சுக்களையும் உள்ளடக்கியிருப்பினும் அது முழுவதும் இறைவனுடைய வார்த்தை என்றே கூறுகிறோம். ஏன் தெரியுமா? மனிதர்கள் பேசியவற்றை மனிதர்கள் இப்படி பேசினார்கள் என்று எழுத்தாளர்களுக்கு சொன்னது தேவன்தான்.

மற்றும் மனிதர்கள் பேசியவற்றை எழுதத் தூண்டி அவற்றை வேதத்தில் சேர்த்ததும் தேவன்தான்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்