தற்கொலை செய்வது பாவமா?

 ஒரு கிறிஸ்தவன் தற்கொலை செய்துகொண்டால் அவனுக்கு என்ன நடக்கும்? 
ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பினும், கிறிஸ்தவன் அல்லாதவனாயிருப்பினும், அவன் தன் ஜீவனை மாய்த்துக்கொள்வதோ, அல்லது மற்றொருவனுடைய ஜீவனை மாய்ப்பதோ கொலைபாதகமாகும். “மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது” (1யோவான் 3.15)


யூதாஸ்கரியோத்து கார்த்தராகிய இயேசுவை காட்டிக் கொடுக்கும் முன்னர் சாத்தான் அவனுக்குள் புகுந்தான் என்பது வேதவாக்கியங்களின் மூலம் தெளிவாயிருக்கிறது (யோவான் 13.27) அதன் பலனாக அவன் தற்கொலை செய்து கொண்டான். தன் ஜீவனை தானே மாய்த்துக் கொள்கிறவன் யூதாஸ்கரியோத்தைக் காட்டிலும் எவ்விதத்திலும் மேலானவன் அல்ல.

சிலர் மதியீனமாகச் சிந்திக்கிறது போல, தற்கொலை செய்து கொள்வது பரலோகத்திற்கு செல்வதற்கான ஒரு குறுக்கு வழி அல்ல. “என்னுடைய எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்” என்பது அவர்களது எண்ணம். ஆனால் உண்மையில் அவர்கள் “பொரிக்கஞ் சட்டிக்குள்ளிருந்து அக்கினிக்குள்” அதுவும் அக்கினிக் கடலுக்குள்தான் குதிக்கிறார்கள். மறுபடியும் பிறந்த எந்த உண்மையான கிறிஸ்தவனும், தன் ஜீவியத்தை இவ்விதம் முடித்துக்கொண்ட பின், தான் பரலோகத்தில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று ஒரு போதும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

வேதாகமத்தில் தற்கொலை புரிந்து கொண்ட ராஜாவாகிய சவுல், அகித்தோப்பேல், யூதாஸ்காரியோத்து போன்றவர்கள் அனைவருமே பயங்கரமான பின்மாற்க்கரராயிருந்தனா். பாவியான ஒருவன் தற்கொலை செய்து கொண்டால் அவன் நரகத்திற்கு  செல்லுகின்றான். ஆனால் மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவன் தற்கொலை செய்து கொண்டால் அவன் அதைக் காட்டிலும் மிக மோசமன இடத்திற்குச் செல்லுகின்றான்; அவன் பின்மாற்றக்காரருக்கென வைக்கப்பட்டுள்ள புறம்பான இருளுக்குச் செல்வான். நரகத்திலுள்ளதைப் பார்க்கிலும் அதிக வேதனையும் அழுகையும் பற்கடிப்பும் அங்கே இருக்கும். (மத்தேயு. 18.12)

தேவன் கிருபையுள்ளவரும், மனதுருக்கமுள்ளவரும், மன்னிக்கிறவருமாயிருக்கிறார் என்பது உண்மையே. உயிரோடிருக்கையில், எந்தவொரு நபரும் ஏதேனும் ஒரு பாவத்தைக் குறித்து மெய்யாக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பினால், அவன் பாவமன்னிப்பை பெற்றுக்கொள்வான். ஆனால் ஒருவன் தற்கொலை செய்து கொண்டால், அவனுக்கு மனஸ்தாபப்படுவதற்கும் தேவனிடத்தில் திரும்புவதற்கும் சந்தர்ப்பமே இராது. தற்கொலை முயற்சியை மேற்கொள்ளும் சிலருடைய விஷயங்களில், அவர்கள் ஒரு வேளை உடனடியாக மரிக்காமல் போகக் கூடும் அவர்களுக்கு மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பி கர்த்தரிடம் மன்னிப்பை பெற்றுக் கொள்ள ஒரு தருணம் கிடைக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் அபூர்வமனவையே!

ஒரு வேளை இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீ தற்கொலை செய்யும் படி தூண்டப்பட்டிருக்கக் கூடும். அருமையான நண்பனே, உன்னுடைய ஆத்துமா நித்திய வேதனையை அனுபவிக்கப் போவது மட்டு மல்லாது, இவ் வெட்ககரமான, பாவச் செயலின் நிமித்தம் கர்த்தருடைய நாமமும் அதிகமாகத் தூஷிக்கப்படும்.

இன்று கிருபையுள்ள கர்த்தர், “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவா்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்க இளைப்பாறுதல் தருவேன்” என்று கூறி, உன்னை அழைக்கிறார். (மத்தேயு. 11.28). அவர் உன்மேல் கரிசனையுள்ளவராய், உன்னை விசாரிக்கிறவராயிருக்கிறபடியால் உன் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடு..

தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர். தாவீது, “நான் கர்த்தரை தேடினேன், அவர் எனக்கு செவிகொடுத்து, என்னுடைய எல்லா பயத்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்”. (சங்கீதம். 34.4) என்று சாட்சி பகருகிறான். கர்த்தராகிய இயேசுவுக்கு நீ உன் இருதயத்தை திறந்து கொடுப்பாயாக. அவர் உன் வேதனையை விளங்கிக் கொள்ளுகிறவராயிருக்கிறார். அவர் நல்ல சமாரியராயிருக்கிறார். அவர் உன் காயங்களையெல்லம் கட்டுவார். 

தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திற்கு நீ இடங்கொடுத்ததைக் கர்த்தர் கிருபையாய் உனக்கு மன்னித்து, உனக்கு புதியதொரு வாழ்க்கையைத் தந்தருளும்படி அவரிடத்தில் தயவாய் மன்றாடுவாயாக. “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” (11கொரி. 5.17)

 “கிறிஸ்தவ வாழ்வின் 50 கடினமான கேள்விகளுக்கான பதில்  எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பதில்கள்..                   

Share this article :

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்