Home » , , , » கிறிஸ்தவனே கவனி மாட்டிக் கொண்டாயோ Facebook ல்?

கிறிஸ்தவனே கவனி மாட்டிக் கொண்டாயோ Facebook ல்?


இன்று அதிகமாக எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கம் “பேஸ்புக்” (Facebook) ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. பூமியில் வயது வரம்பின்றி அநேகர் இதினால் கவரப்பட்டுள்ளனர்.

“காம்ஸ்கோர்-”ன் ஆய்வின்படி, தற்போது இந்தியர்கள் தேசங்களின் வரிசையிலான பேஸ்புக் புள்ளி விபரத்தின் படி 4.5 கோடி நபர்கள் உபயோகிப்பதால் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர். 

மேலும் இக்காலத்து வாலிபர்களின் சமீபகால வழக்கம், நிஜ மனிதர்களோடு நேரம் செலவழிப்பதை தவிர்த்து, “பேஸ்புக்” இல் மூழ்கி இருப்பதே. ஒரு மாதத்திற்கு சராசரியாக 80.3 மணிநேரங்கள் “பேஸ்புக்” இல் செலவிடப்படுகிறது என்ற அறிவிப்பு விழிப்பை உண்டாக்குகின்றது. இந்த ஆய்வுகளெல்லாம், இதன் அதிகமான பயனை எல்லோரும் பெற்றக்கொள்ள விரும்புகின்றனர் என்ற ஒரு காரியத்தை தெளிவாக விளங்கப்பண்ணுகின்றன.

மக்கள் மேலும் மேலும் ஒரு சமூகத் தொடர்பு மென்பொருளுக்குத் திரும்பவும், தங்கள் முகங்களை பேஸ்புக் இல் பதிக்கவும் என்ன காரணம்? மக்கள் உணர்வு பூர்வமான தங்கள் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்று விரும்புவதே இதற்கு அடிப்படையான காரணம். மனிதர் அன்பு, சுய மதிப்பு மற்றும் சொந்தப் பாராட்டுதல் ஆகிய மூன்று விதமான உணர்வு பூர்வமான தேவைகளைக் கொண்டிருப்பதால் தங்கள் புகைப்படங்களையும் செயல்களையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதின் மூலம் திருப்தியடைய முயற்சிக்கின்றனர். பகிரங்கமாக இதை வெளிப்படுத்தாவிட்டாலும் மறுக்க முடியாது மறைந்த உண்மை என்னவெனில் அவர்கள், கவனிப்பையும் சொந்தம் பாராட்டுதலையும் நாடுகிறார்கள் அவர்கள் இருதயத்தின் அடி ஆழத்தில் மக்கள் தங்களை கவனிக்க வேண்டும் என்ற தணியாத ஏக்கம் காணப்படுகிறது. எனவே மக்கள் தங்கள் பதிவுகளைக் கண்டு கருத்தக்களை அனுப்பும் போது, சற்று உற்சாகமடைகின்றனர் இல்லையா?

நியுயார்க் பல்கலைக்கழகம் 2010ம் ஆண்டின் ஆய்வில் இந்த உண்மையை ஆமோதிக்கின்றது. இதில் வெளிப்படுத்தப்பட்ட காரியம், ஆண்கள் “என்னைப் பற்றி” என்ற தலைப்பில் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளவும் பெண்கள் உடலழகை வெளிப்படுத்தும் அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்களைச் சேர்க்கவும் விரும்புகின்றனர் என்பதே.

இதை உற்றுக் கவனித்தோமானால் பேஸ்புக் நம்மை சுயநலம் சார்ந்த மக்களாக மாற்றுகிறது என்பதை கண்டுகொள்ளலாம் மெய்யாகவே அது நம்மைச் சுயத்தை மையமாக கொண்டவர்களாக உருவாக்குகிறது. பவுல் தீமேத்தேயுவுக்கு எழுதின நிருபத்தில் குறிப்பிட்டுள்ள கடைசிகால கொடிய காரியங்கள் பலவற்றில், முதலில் காணப்படுவது, “மனிதர்கள் தற்பிரியர்களாக இருப்பார்கள்” என்பதே (2தீமோ 3.1). பரிசேயர் ஜனங்களின் புகழ்ச்சியை நாடினதை இயேசு வன்மையாகக் கண்டித்ததை நமக்கு இது ஞபகப் படுத்துகின்றது.

ஜனங்கள் தங்கள் நற்காரியங்களை காணவேண்டும், பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அநேக நற்காரியங்களைச் செய்தனர். நண்பனே பரிசேயரின் புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கை – புதிதியாய் பிசைந்த மாவை ஒரு துளி புளித்த மா புளிக்கப்பண்ணி விடுமே! அதபோலத்தான் ஒரு புகைப்படத்தை போடுவதோ கருத்தை பரிமாறிக் கொள்வதோ மக்கள் நம்மை ரசிக்க வேண்டும், புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தால், நம் வாழ்க்கையில் சரி செய்ய முடியாத சேதங்கள் ஏற்படும்.

இதற்கு மேலாக பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவதால் மனநிலை பாதிப்புக் கூட ஏற்பட வாய்ப்புண்டு. சமீபத்தில் மனோதத்துவ நிபுணர்கள் Facebook Addiction Disorder (FAD) என்ற பிரிவைத் துவங்கி, அதிகமான பேஸ்புக் உபயோகத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துகிறார்கள். நாம் ஜாக்கிரதையோடு பேஸ்புக்கை உபயோகிப்பதற்கு இது நமக்கு விழப்புணர்வைத் தரும் ஒரு அழைப்பாய் இருக்கிறது,

நாம் ஃபேஸ்புக்கிற்கு அடிமையாகி விட்டோமா இல்லையா என்பதை அறிய இதோ ஒரு சில தன்னாய்வுக் குறிப்பகள் – உண்மையான பதில்களைக் கீழ்கண்ட கேள்விகளுக்குத் தந்து உங்களை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

  எந்த வேலையும் இல்லாமல் நீங்கள் தனிமையாய் இருக்கும் எல்லா சூழ்நிலைகளிளும் பேஸ்புக்கில் இருக்கிறீர்களா?

  நீங்கள் உங்கள் சொந்த தகவல்களை அடிக்கடி பேஸ்புக்கில் பதிவு செய்யும் பழக்கம் உள்ளவரா?  

   நீங்கள் பேஸ்புக்கில் நாளொன்றுக்கு ஒரு முறைக்கு மேல் உங்கள் தன்னிலைக் குறிப்புகளை பதிவு செய்கிறீர்களா?

  நீங்கள் அறியாத ஒரு நபரின் பேஸ்புக் நட்பு அழைப்பிற்கு இணங்கி விடுகிறீர்களா? (அது பொய்யான தனிநபர் விபரமாக இருக்காது என்ற யூகத்தில்)

  தேவனோடு தரமான நேரத்தை செலவிடாமல், உங்கள் பெறுப்பக்களை சரிவர நிறைவேற்றாமல், பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா?

  மற்றவர் உங்களை புகழவும், ரசிக்கவும் வேண்டுமென்று அடிகடி உங்கள் புகைப்படங்களைப் பதிவு செய்கிறீர்களா?

  மற்றவர்களுடைய வாழ்வில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்களா?

   நடு இரவில் கூட பேஸ்புக்கில் என்ன பதிவுகள் உள்ளன என்று பார்க்க தோன்றுகிறதா?

    உங்கள் தோற்றம், சாதனைகள், கடந்தகால நிகழ்வுகளைச் சார்ந்த உங்கள் அடையாளத்தைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா?

   ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்தவுடன் பேஸ்புக்கில் புது பதிவுகள் உண்டா என்று பார்க்க ஆர்வமாக உள்ளீர்களா?

முடிவாக “பேஸ்புக்கிற்கு நான் எதிர்த்து நிற்பவன்” என்று தவறாக எண்ண வேண்டாம். நானும் அதைப் பயன்படுத்துகிறேன். உங்கள் குடும்பத்தினருடன் மற்றும் நண்பருடன் போதுமான நேரத்தை செலவிடுங்கள். மற்ற பொழுதுபோக்குகளான, புத்தகம் வாசித்தல், இசையை கேட்டல், விளையாட்டு ஒன்றில் பங்கு பெறுதல் என மற்ற வழிகளை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வை, மற்றவர்கள் காண வெட்ட வெளிச்சமாகாதீர்கள். பின்னாட்களில் மனம் வருந்த நேரிடும்.

நீங்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் உங்களை திருப்தி செய்வதாக இல்லாமல், சிறந்த மதிப்புடையதாக இருக்க வேண்டும். உங்கள் பேஸ்புக் கணக்கில்  சென்று, பதிவு செய்த புகைப்படங்கள் எத்தனை உங்களுடையதல்லாதது, நல்ல நோக்கத்தோடு உள்ளன என்று ஆராய்ந்து பாருங்கள். ஒரு சில வாரங்கள் பேஸ்புக்கிலிருந்து விலகியிருக்க முயற்சி செய்து, அது உங்கள் மன அமைதியை பாதிக்கிறதா என்று பாருங்கள்.

நாம் இயேசுவுக்கு நண்பர்கள், ஆதலால் நாம் அவரை நம் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக பேஸ்புக்கை பயன்படுத்த வேண்டும். உங்கள் பதிவுகளை அநேகர் விரும்பவில்லை என்றால் வருந்த வேண்டாம், தொடர்ந்து தேவனை மகிமைப்படுத்த பேஸ்புக்கை உபயோகியுங்கள்.

எவரும், எதுவும் உங்கள் வாழ்க்கையை ஆண்டுகொள்ள விடாதீர்கள். தங்களை சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, “தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்” என்ற வசனத்தின் படி எல்லாச் சூழ்சிலைகளிலும் வெற்றி காண்பீர்கள். (ஏசா 14.2)

நான் புத்தகங்களின் புத்தகத்தையே வாசிப்பேன்
அவருடைய முகத்தையே நோக்கவேன்
மற்றவர்களின் விருப்புகளையோ குறிப்புகளையோ
சார்தல்ல அவருடைய அநாதி கிருபையாலேயே இரட்சிக்கப்பட்டடேன்.   
              

----------------------------- பிளசிங் மாத இதழ் ஆலன், மிஷனரி, ராஜஸ்தான். -----------------
Share this article :

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்