Home » , » ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -01

ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -01

ஞனஸ்நானத்தின் முக்கியத்துவம்
  1.   ஞானஸ்நானம் என்றால் என்ன?
  2.   அந்த ஞானஸ்நானம் யார் எடுக்க வேண்டும்?
  3.   அதை எப்படி எடுக்க வேண்டும்?
  4.   அப்படி வேத வசனத்திற்கு கீழ்ப்படிந்து எடுப்பதினால் பலன் என்ன?
மேற்கூறிய இக்கேள்விகளுக்கு சத்திய வேதம் தெளிவாய் எவ்வளவேனும் சந்தேகத்திற்கு இடமின்றி எவரும் அறிந்து உணர்ந்து கீழ்ப்படிவதற்கு ஏதுவாக நமக்குப் போதிக்கிறது,
பாஸ்டர். பாஸ்கர் தாசன் அவர்களால் 1989 ம் ஆண்டு எழுதப்பட்டு 2004 இல் பாஸ்டர் சார்லஸ் தாசன் அவர்களால் மீள் பதிப்பு செய்யப்பட்ட “ஞானஸ்நானம் என்கிற திருமுழுக்கு” என்னும் புத்தகம் காலத்தின் தேவை கருதி இங்கு பிரசுரம் செய்யப்படுகிறது.

நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் சுவிஷேசம் பிரசங்கிக்கப்பட்டு வருகிற இடமெங்கும் ஞனஸ்நானம் என்கிற திருமுழுக்கு அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது நமது கர்த்தர் கொடுத்த கட்டளைகளில் முக்கியமானதொன்று. உலகமெங்கும் போய் சர்வ ஜாதிகளையும் சீஷராக்கி, ஞனஸ்நானம் கொடுக்க கர்த்தர் கட்டளை கொடுத்தார். எனவே சீஷத்துவத்தின் முக்கியமான படிகளில் இதுவும் ஒன்று.

கிறிஸ்தவ ஆவிக்குரிய ஜீவியத்தில் இத்தகைய முக்கியத்துவம் கொண்ட இவ்வனுபவத்தை பலர் உதாசீனம்பண்ணி, ஞனஸ்நானத்தை யார் எடுத்தாலும், எப்படி எடுத்தாலும்  தவறில்லை என கருதுகின்றனர். இந்த ஞனஸ்நானம் என்கிற சத்தியம் நமது இரட்சிப்பை சார்ந்திருக்கிறது. என்பதை வேதத்தின் மூலம் நாம் அறிகிறோம்.

I பேதுரு 3:21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
மாற்கு 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் இரட்சிப்பு உண்டென்று விசுவாசிக்கிறோமே. அவரது உயிர்தெழுதலினாலும் இரட்சிப்பு  உண்டென்று இதனால் நாம் அறிய வேண்டும். எனவே நமது இரட்சிப்பு பூரணப்பட ஞனஸ்நானமும் அவசியம் என்பதை நாம் அறிவோம்.

ரோமர் 6:4  மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
கொலோசெயர்2:12  ஞானஸ்நானத்திலே அவரோடேகூட  அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

உலகத்திலுள்ள எல்ல மதக்கர்த்தாக்களும் மரித்து கல்லறைகளில் அடக்கம் பண்ணப்பட்டவர்களாயிருக்கையில், நமது ஆண்டவருடைய கல்லறை மாத்திரம் காலியாயிருக்கிறது; இந்த அற்புதத்தைக் குறித்த சாட்சியை நாம் உலகிலுள்ள மற்ற மக்களுக்கு எப்பபடி எடுத்துக்காட்ட முடியும்? இதையே மேற்கூறிய வசனங்கள் தெளிவாய் விளக்குகின்றன.
நாம் தண்ணீரில் அடக்கம் பண்ணப்படும் செயல் கிறிஸ்துவின் கல்லறை அடக்கத்தோடு உருவ ஒப்புமை செய்யப்படுகிறதை நாம் கவனிக்கிறோம். அந்தபடியே தண்ணீரிலிருந்து வெளியே வருவதை கிறிஸ்து மரணத்திலிருந்து உயிரோடு எழுந்ததுடன் உருவ ஒப்புமை செய்யப்படுகிறதையும் காணலாம். இந்த மகிமையான அனுபவத்தை பலர் அவமதித்து, அசட்டை செய்து, கீழ்ப்படியாமல் தேவ ஆலோசனைக்கு எதிர்த்து நிற்கிறார்கள்.

எப்படியெனில் “இந்த ஞனஸ்நானம் அவ்வளவு முக்கியமல்ல; இரட்சிப்புதான் முக்கியம். கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படுதலே அவசியமானது. ஆவியைப் பெறுவதும் அவசியமே. ஆனால் எந்த ஞனஸ்நானத்தை, யார், எப்படி எடுத்தாலும் குற்றமில்லை” என்று பிரசங்கிப்போரும் உண்டு.

ஆனால் வேதம் என்ன கூறுகிறது?

I யோவான் 5:8 பூலோகத்திலேசாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் “இவை ஒன்றை ஒன்று ஆமோதிக்கிறது” (These three agree in one) என வாசிக்கிறோம். ஆவியானவரின் சாட்சி, ஜலம் கொடுக்கும் சாட்சியை ஆமோதிக்க வேண்டும். ஜலம் இரத்தம் கொடுக்கும் சாட்சியை ஆமோதிக்க வேண்டும்.

எபிரெயர் 12:24 புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.

ஆபேலின் இரத்தம் பேசினதாமே! என்ன பேசிற்று? அது பூமியிலிருந்து பரலோகத்தின் தேவனைக் கூப்பிட்டு, பழி வாங்கினது (ஆதி 4:10) ஆனால் கர்த்தராகிய இயேசுவின் இரத்தமோ கொலை பாதகரை பழிவாங்காமல் அவர்களுக்காக பிதாவாகிய தேவனிடத்தில் பாவ மன்னிப்பைக் கோரினது. (லூக்கா 23:34, 1யேவான் 1:7).

இப்படி ஒருவன் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் சாட்சியைப் பெற்றது உண்டானால், அந்த சாட்சியை ஜலமும் ஆமோதித்தல் அவசியமே. அவன் ஞனஸ்நானம் பெற்ற தண்ணீர் அவனைக் குறித்து சாட்சி சொல்லுமே. எப்படியெனில் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட இயற்கையின் பொருள்கள் அனைத்தும் அவருக்கு சாட்சி கொடுக்கும் அல்லவா?

இப்படி ஜலம் கொடுக்கும் சாட்சியை ஆவியானவர் ஆமோதிக்க வேண்டும். அதையே ரோமர் 8:16 இல் வாசிக்கிறோம். “நாம் வேனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே கூட சாட்சி கொடுக்கிறார்.”
“நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால்அதைப் பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது. தேவன் தமது குமாரனைக் குறித்து கொடுத்த சாட்சி இதுவே”  (1யேவான் 5:9)

பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசுவைக் குறித்து என்ன சாட்சி கொடுத்தார்? “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத் 3:17)
இது அல்லவோ பிதாவானவா் குமாரனைக் குறித்து கொடுத்த சாட்சி. இவர் ஞனஸ்நானம் பெற்று கரை ஏறின உடனே பிதா கொடுத்த சட்சி இதுவே. இதை வாசிக்கும் அருமை நண்பரே, இவ்விதமான சாட்சியை நீர் பெற்றதுண்டோ?

ஞனஸ்நானத்தில் திருவசனத்திற்குக் கீழ்ப்படிய மனதில்லாமல் இருக்கும் சிலர் கேட்கும் முரணான கேள்விகள்
  1.   இப்பொழுது “இந்த முக்கியமான அனுபவத்திற்கு நான் எப்படி கீழ்ப்படிய வேண்டியது? முழுகித்தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமோ?”

முதலாவது “முழுக்கு ஞனஸ்நானம்” என்ற சொல் வேதத்தில் இல்லை, ஆனால் “ஞனஸ்நானம்” என்கிற பதத்திற்கே “தண்ணீரில் முழுகுதல்” என்றுதானே பொருள்.
மூல பாஷையாகிய கிரேக்க மொழியிலே இப்பொழுது இருக்கும் பதங்களும் அவைகளின் அர்த்தங்களும் நமது ஆண்டவர் இருந்த காலத்திலும் பழக்கத்தில் இருந்தவைகளே. அதாவது பாப்டிசோ (Baptizo) என்றால் முழுக்கு என்றே பொருள். வேதத்தில் இப்பதமே இவ்வனுபவத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்து.
நமது தமிழ் மொழியில் “ஸ்நானம்” என்ற பதத்துக்கு சில துளிகள் தலையின் மீது தொளிப்பது என்று பொருளல்ல, அப்படி அனுதினமும் தெளித்து விட்டு ஸ்நானம் பண்ணிவிட்டேன் என்று யாராவது சொல்லுவார்களா?
வேதத்தின் கட்டளை யாதெனில் தன் பாவங்களை அறிக்கை செய்து விட்டு விட்டவன் கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவை அறிக்கை செய்து, ஞனஸ்நானத்தினால் தண்ணீரில் மூழ்கி அடக்கம் பண்ணப்பட வேண்டும் என்பதே. அவரோடு கூட அடக்கம் பண்ணப்படுதலின் அடையாளம் இதுவே.  
திருச்சபையின் ஆதித் தலைவர்களின் விளக்கம்   
அ. “ஞானஸ்நானம்” என்ற சொல் முழுகுதல் என்று பொருள்படுகிறது ஆதித்திருச்சபை பின்பற்றிவந்தது “முழுகுதலே” ஜான் கல்வின்
. “ஞனஸ்நானத்தில் கிறிஸ்துவோடு கூட அடக்கம்பண்ணப்பட்டோம்” (ரோமா்-6:4) . இது பண்டைய முறையான முழுக்குதலினால் ஞானஸ்நானம் கொடுக்கிறதை குறிப்பிடுகிறது.  ஜான் வெஸ்லி
இ. “ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் முற்றிலுமாக நீரில் அமிழ்த்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”.  மார்ட்டின் லுத்தா்
     “திரியேகரான உம்மையே
     நான்பிள்ளை பக்தியாக
     பணிந்து உமக்கேற்கவே
     நடப்பேன் என்றதாக
     இஸ்நானத்திலே அடியேன்
     உடன்படிக்கை பண்ணினேன்
     இதை நினைப்பேனாக.”
-  சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டு 113

     “தெய்வீக நீதியாவுக்கும்
     சரி செலுத்த வந்த
     இரட்சகர் ஸ்நானமும்
     யோர்தானில் பெற்ற னந்ந
     உயிர் உண்டாக்குஞ்சாவுக்கே
     அமிழ்ந்தார், நமக்காக
     முழுக்கின் நற்பலனிலே
     நமக்கு பங்குண்டாக
     இஸ்நானத்தை அமைத்தார்.”

     “தண்ணீரை மாத்திரங்கண்ணால்
     கண்டாலும், விசுவாசம்
     அத்தோட கிறிஸ்தின் ரத்தத்தால்
     உண்டான பாவடி நாசம்
     உண்டென்றும் அறிகிறது.
     ஆம், ஞானஸ்நானத்திலே
     இரட்சிப்பு யாவும் நமக்கு
     பலிக்க, ஆவியாலே
     நாம் புதுசிருஷ்டியாவோம்.”  
-  சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டு 114
-   
“அதுதான் மறு ஜென்ன
முழுக்கு அத்தால் சாவும்
தெய்வீக கோபம் நரக
கொடியுங்கோடும் யாவும்
இல்லாதேபேவதன்றியே
கர்த்தரின் ஆசிர்வாதமே
நமக்கத்தால் உண்டாகும்.”
-  சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டு 115

  2.   குழந்தையிலேயே ஞனஸ்நானம் பெற்ற நான் திரும்பன ஞானஸ்நானம் பெற அவசியமா?

இக்கேள்வியை கேட்கும் நீர் குழந்தையாயிருக்கும் போது ஞனஸ்நானம் எடுக்கவில்லையே. ஞனஸ்நானம் உமக்கு கொடுக்கப்பட்டது. குழந்தைப்பருவத்தில் நீர் ஒன்றையுமே உமக்கென்று பெறுப்புணர்ச்சியோடு செய்துகொள்ளவில்லையே, சகலமும் உமக்கு செய்யப்பட்டது. குளித்தல்,புசித்தல், குடித்தல் மற்றும் குழந்தை செய்யும் அசுசிகள் எல்லாவற்றிற்கும் நீர் பொறுப்பாக இருந்ததில்லையே.

அதுபோலவே நீர் குழந்தையாக இருந்த போது ஞனஸ்நானம் எடுக்கவில்லை உமக்கு ஞனஸ்நானம் கொடுக்கப்பட்டது.

கர்த்தாவின் சாயல் பாவத்தாலே
இல்லாதே போனதாலே
உன் ஸ்வாபம் யாவும் பேயினால்
இப்பாவ விஷத்தாலே
கெடுத்துப்போடப்பட்டது;
பிறந்த நாளில் ஸ்வாமிக்கு
அத்தால் நீ பிள்ளை அல்ல”    
சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டு 115
பருவம் அடைந்த பிறகு இக்குழந்தை ஞனஸ்நானத்தின் தவறை சீர்செய்வதற்கு ஒப்பாக “திடப்படுத்தல்” (Confirmation) என்ற வேதத்தில் இல்லாத ஒன்றை அனுசரிப்பதினால், தான் முந்தி செய்த தவறினை மற்றொரு தவறினால் சரிப்படுத்திக்கொள்ள பார்ப்பவா் உண்டு, அச்சமயத்தில் பாடுகிற பாட்டு நினைவிலிருக்கிறதா?
“அன்னை தந்தையுந்தன் சன்னதி
முன்னின்று சொன்ன வாக்குத்தத்தம்… அல்லாது (செல்லாது, பிரயோஜனமல்லாது) இப்போது (புத்தி தெரிந்த பிறகு, பருவம் அடைந்த பிறகு, செய்வது இன்னதென்று பொறுப்பை உணர்ந்த பபிறகு)
என்னை ஜீவ பலியாய் ஒப்புக்கொடுத்தேன் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே”. 
மேலும்: “பாவங்களை அறிக்கையிட்டு,” மனந்திரும்பி,” “விசுவாசமுள்ளவனாகி” ஞனஸ்நானம் பெற வேண்டும் என வேதம் கூறுகிறது. நீர் ஒரு சிசுவாயிருக்கையில் உம்முடைய பாவங்களை அறிக்கையிட்டதுண்டோ? மனந்திரும்பி விசுவாசித்ததுண்டோ?
  3.   சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்ளன்  ஞனஸ்நானம் பெறவில்லையே, அவன் எப்படி பரதீசடைந்தான்?”
அந்தக் கள்ளனைப் போல் நீா் இல்லையே, மரணத்தருவாயிலிருந்து அவனுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் அவனும் ஞனஸ்நானம் எடுத்திருப்பான். நீரும் அவ்வண்ணமே சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் தருவாயில் இரட்சிப்படைந்திருந்தீரேயானால் அந்தக் கேள்வியை கேட்பதில் அர்த்தமுண்டு.
  4.   ஞனஸ்நானம் பெறாமலே அநேகர் மரிக்கிறார்களே, அவர்கள் எல்லோரும் நரகத்திற்கா செல்கிறார்கள்?
இந்தக் கேள்வியை கேட்பவரிடம் மற்றொரு கேள்வியை கேட்கலாமே. கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாதவர் நிலை என்ன?
அவர்கள் இரட்சிப்பைக் குறித்து கேள்விப்படாமல் மரித்திருந்தால் அவர்களுக்கு வேறு ஒரு பிரமாணம் உண்டு என வேதம் கூறுகிறது. ரோமர்-2:11-16, ரோமர்-1:19-20 இவ்விடத்தில் “மனசாட்சியின் பிரமாணம்” என்று தேவன் ஒரு பிரமாணத்தை மனிதனுடைய இருதயத்தில் எழுதிவைத்துள்ளார். அவரே மனிதனுடைய அந்தரங்கங்களைக் குறித்து நியாயம் தீர்ப்பார்.

“அறியமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போல் இருந்தார்.” (அப்-17:30) ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற் போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும். என்று வேதம் கூறுகிறது (யாக்-4:17) அறிந்தும் கீழ்ப்படியாதவர்கள் அநேக அடிகளால் அடிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டதை நீா் வாசித்ததில்லையா? (லூக்கா-12:47)     
  5.   “திருச்சபையை விட்டு வெளியே போகக்கூடாது”
இப்படி பேசுகிறவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி “மனிதனே, திருச்சபை என்பது எது?”
வனாந்திரத்தில் சபைக்குள்ளிருந்தவனும்(அப்-7:38) (The Church in the wildemess) இவ்வசனத்தில் பாஸ்கா ஆட்டின் இரத்தத்தால் மீட்கப்பட்டு வனாந்திரத்தில் பிராயாணம் பண்ணிக் கொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து வாசிக்கிறோம். இதுவுவம் திருச்சபையே (Church). மூல பாஷையில் “திருச்சபை” க்கு (Ekklesia) எனும் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. அதன் பொருள் யாதெனில், வெளியே அழைக்கப்பட்டவர்கள் என்று பொருள். அதுவே திருச்சபையின் ஞான அர்த்தமும் கூட, எனவே இயேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு இவ்வுலகத்தின் பாவ அடிமைத்தனத்திலிருந்தும் பிசாசின் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்களே இச்சபையின் அங்கத்தினராவர் (EK = out of, KALEO =Called)
புதிய ஏற்பாட்டில் ஸ்தல சபை (Local Church) என்றும், (பிலேமோன்-2, கொலோ-4:5, அப்-02:41-47) அகிலாண்டசபை (Universal Church) எனறும் அர்த்தம் கொள்ளக் கூடிய இரண்டு வசனங்கள் உண்டு. ஒருவன் ஜலத்தினால் ஞனஸ்நானம் பெறும்போது இந்த ஸ்தல சபையின் (Local Church) அங்கத்தினனாகிறான் (அப்-2:40). ஆனால் 1கொரி-12:13ம் வசனத்தில் வாசிக்கிற ஞனஸ்நானம் ஆவிக்குள்ளாக ஒருவன் பெறுகிற அபிஷேகமே. இதன் மூலம் அகில உலக சபையிலே (Universal Church) அங்கத்தினன் ஆகிறான் (1கொரி. 15.9)
எனவே, மேற்கூறிய வசனங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் சத்தியம் யாதெனில் திருச்சபை என்பது இரத்தத்தால் மீட்கப்பட்டு இவ்வுலக வழிபாட்டிலிருந்து அழைக்கப்பட்டவர்களின் கூட்டமே. இதற்கே திருச்சபை என்று பெயர். இவ்வித ஆவிக்குரிய அனுபவங்களால் ஒருவன் திருச்சபைக்குள்ளே வருகிறானேயன்றி, திருச்சபையை விட்டு வெளியே போவதில்லை. இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு, ஞனஸ்நானம் பெற்றவன்தான் அந்த மெய்யான திருச்சபையில் அங்கத்தினனாய் இருக்க முடியும்.    
  6.   தாய்ச் சபையை விட்டு விட்டு எப்படி போவது?” என்று சிலர் கூறுகிறார்கள்.
எது தாய் சபை?
சி.எஸ்.ஜ – தென்னிந்திய திருச்சபை தாய்ச் சபையா? அல்லது அதற்கு முன்பு இருந்த சபைகளாகிய எஸ்.பி.ஜி, எல்.எம்.எஸ், சி.எம்.எஸ், வெஸ்லியன் மிஷன் தாய்ச் சபையா? இவைகளுக்கெல்லாம் தாயாக மார்ட்டின் லுத்தர் ஸ்தாபித்த லுத்தரன் சபை தாய்ச் சபையா? அல்லது அந்த லுத்தரன் சபை ரோமன் கத்தோலிக்கச் சபையிலிருந்து வந்ததனால் இந்த ரோமன் கத்தோலிக்கச் சபை தாய்ச் சபையா? எது தாய்ச் சபை?
ரோமன் கத்தோலிக்கச் சபை நாம் வேதத்தில் காணும் அப்போஸ்தல திருச்சபையிலிருந்து திரிந்து போனதே. எனவே நீர் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். வேதத்தில்  நாம் வாசிக்கும் அப்போஸ்தல திருச்சபையே யாவற்றிற்கும் தாய்ச்சபை.
7.   அப்-16:31-34, 1கொரி-10:1-4 இவ்வசனங்களை வாசித்து விட்டு சிலர் “வீட்டாரனைவரோடும் கூட ஞனஸ்நானம்  பெற்றான்” , “எல்லாரும் … ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்” – என்னும் சொற்கள் எழுதியிருப்பதினால் சிறைச்சாலைக்காரன் வீட்டில் குழந்தைகளும் இருந்திருக்கக் கூடும். இஸ்ரவேலர் மத்தியில் குழந்தைகளும் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து போயிருக்கக் கூடும். எனவே அவ்விரு இடங்களிலும் குழந்தைகளும் ஞனஸ்நானம் பெற்றிருக்கக் கூடும் என்று வாதாடுகிறார்கள்.
உங்கள் குடும்பத்தை யாராகிலும் விருந்துக்கு அழைத்தால் நீங்கள் குடும்பமாக சென்று விருந்துணடடீர்கள் என்றால், உங்கள் வீட்டிலுள்ள பால் குடிக்கும் குழந்தையையும் கூட விருந்து புசித்தது என்று நீர் சொல்வீரோ? அப்படி சொல்வது தவறு அல்லவா? ஆகவே ஞானஸ்நானம் பாவங்களை அறிக்கை செய்து அவற்றை விட்டு, விட்டு விசுவாசித்தவர்களுக்கு மட்டுமே!
  8.   “ஒரே ஞானஸ்நானம்……………. (எபேசியா் 4.5)
 “ஞானஸ்நானம் ஒன்றுதானே, பின்னை ஏன் ஏற்கெனவே குழந்தையில் ஞானஸ்நானம் பெற்ற நாம் திரும்பவும் ஞானஸ்நானம் பெற வேண்டும்” என்று வேறு சிலர் தர்க்கிக்கின்றார்கள்.
முதலில் எடுத்த ஞானஸ்நானம் வேத வசனத்தின் முறைப்படி இல்லாவிடில் அவர்களை திரும்பவும் திருவசனத்தின் பிரமாணத்தின்படி ஞானஸ்நானப்படுத்துவது வேதத்தின் முறைதான். “ஒரே ஞானஸ்நானம்” என்று எழுதப்பட்டது எபேசு சபைக்கே. அந்த எபேசு சபையே முதலில் எடுத்த ஞானஸ்நானம் தவறு என்று உணர்ந்து சரியான வேத முறைப்படி ஞானஸ்நானம் பெற்றது நினைவிருக்கட்டும் (அப்-19:3-5).
தவறான ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு திரும்ப ஞானஸ்நானம் கொடுத்ததை வேதத்தில் வாசிக்கிறோம். இப்படி தவறான ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு வேதத்தின் முறையான ஞானஸ்நானம் திரும்ப கொடுத்தவர்கள் திருச்சபை சரித்திரத்தில் உண்டு அவர்களை Ana-Baptists என்று வரலாறு கூறுகிறது.  
  9.   “சிலர் முழுகிதானே ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்,யாரிடத்திலும் எங்கும் எடுத்தால் என்ன?” என்று சொல்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் வேத வசனத்தின்படி ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று இருதயங்களில் உணர்த்தப்பட்டு, போய், எங்கோ ஒரு இடத்தில், ஏதாவது ஒரு சுவிசேஷகரிடத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கின்றனர்.
இப்படி இவர்கள் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதற்கு ஒரு காரணம் உண்டு அப்படி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறதற்கு அந்த ஊழியர்களுக்கும் ஒரு காரணம் உண்டு.
அவர்கள் எங்கோ போய் ஒரு சுவிசேஷகன் ஏதோ ஒரு நீச்சல் குளத்தில் கொடுக்கின்ற ஞானஸ்நானத்தைப் பெற்றுத் தங்களது சொந்த இடத்திற்குத் திரும்புகின்றனர். யாராவது அவர்களிடத்தில் “நீங்கள் முழுகி ஞானஸ்நானம் பெற்றீர்களா” என்று கேட்டால் அதற்கு “ஓ நான் பெற்றுவிட்டேன்” என்று பதில் உரைப்பார். இப்படி வேறு இடத்திற்கு சென்று பொறுப்பற்ற ஒரு சுவிசேஷகரிடத்தில் இவர்கள் ஞானஸ்நானம் பெற காரணம் யாது? தாங்கள் ஞானஸ்நானம் பெற்றும் திரும்ப வந்து தங்களது பழைய சபையிலேயே அங்கத்தினர்களாய் தொடர்ந்து ஜீவிக்கிறார்கள் ஏன் தெரியுமா? அவர்களது ஆவிக்குரிய நலனுக்கென்று சத்தியம் போதிக்கிற சபையில் சேர்ந்து கர்த்தரில் வளர மனம் இல்லாததினால்தான்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஞானஸ்நானம்கொடுக்க துடித்துக் கொண்டிருக்கிற பொறுப்பற்ற சில ஊழியக்காரர்கள் முன் வருவதன் காரணம் தெரியுமா? அவர்களது அங்கத்தினத்துவத்துக்கு தங்கள் பழைய சபையிலே சந்தா (Supscription) கொடுத்துவிட்டு, தங்கள் தசம பாகத்தில் மீதி தொகை முழுவதையும் இந்த மேற்கூறிய பொறுப்பற்ற ஊழியர்கள் தங்களுக்கென்று பெற்றுக்கொள்வதே! இது வேதத்தின் முறை அல்ல.
“கண்ட இடமெல்லாம் நீ உன் பலியை செலுத்தாதே”தேவன் குறித்த ஸ்தலத்திலே உன் ஆலயம் கட்டப்பட வேண்டும். 2நாளா-3:1 இவ்வண்ணம் வேதன் ஒரு ஆவிக்குரிய சபையில் உங்களை சேர்த்து அதிலே நீங்கள் வசனத்தைக் கேட்டு ஆவியிலே வளர சித்தங்கொண்டுள்ளார்.  
நல்ல சமாரியன் (இரட்சகராகிய இயேசு) காயப்பட்டு கிடந்தவனை (பாவியை) காயம் கட்டி சத்திரத்தில் கொண்டு வந்து (இரட்சித்து, சபையில் சேர்த்து) ஒரு சத்திரக்காரன் கையில் (ஒரு போதகர் பொறுப்பில்) ஒப்புக் கொடுத்து, இரண்டு பணத்தையும் அவனுக்கு கொடுத்து (தேவனுடைய வசனமும், தேவனுடைய வல்லமையும் மாற்கு-12:24) போனார்.
தேவ வசனத்தின்படியும், ஆவியானவரின் வழி நடத்துதலின் பேரிலும் கட்டப்பட்ட சபை அவசியம். இதுவே தேவன் குறித்த ஸ்தலம்.
 10. சிலர் ஞானஸ்நானத்தை வசனத்தின்படி எடுக்க மனம் உள்ளவர்களாய் இருந்தும் அதை எவருக்கும் தெரியாமல் ரகசியமாய் எடுத்தால் என்ன? என்று கேட்கின்றனர்.
நீ என் இருதயத்தில் விசுவாசித்து, நீ விசுவாசித்ததை எவரும் அறிய அறிக்கையிட்டால் இரட்சிக்கப்படுவாய் என்று வேதம் கூறுகிறது. (ரோமா் 10.9)
உள்ளான மனுஷனிலே ஏற்பட்ட மாறுதலை புறம்பான ஜீவியத்தில் – ரகசியமாய் அல்ல, பகிரங்கமாய்க் காட்டுவதே ஞானஸ்நானத்தின் பொருள்.
 11. “எங்கள் சபையில் குழந்தை ஞானஸ்நானம் கேட்பவர்களுக்கு குழந்தை ஞானஸ்நானத்தையும், விசுவாசித்து முழுக்கு ஞானஸ்நானம் பெற விரும்புகிறவர்களுக்கு அவர்கள் விருப்பப்படியும் ஞானஸ்நானம் கொடுத்து வருகிறோம்; இதில் தவறு என்ன”? என்று சிலர் கேட்கிறார்கள்.
இதற்கு வேதம் சொல்வது என்ன? எபே-4:5 ல் ஒரே ஞானஸ்நானம் என்று கூறப்பட்டிருக்கிறதல்லவா? எனவே ஒருவர் எத்தனை வித ஞானஸ்நானம் பெற்றிருந்தும், அவர் கடைசியாக பெறும் ஞானஸ்நானங்களையும் ரத்து செய்து விடுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட ஞானஸ்நானத்துக்கு வேதத்தில் அனுமதி  இல்லை.
 12. “மிகவும் குளிரான தேசங்களில் தண்ணீர் உறைந்திருக்குமே! அவர்களுக்கு எப்படி ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்?
அவர்கள் எல்லாரும் ஒரு வருஷத்தில் சில நாட்கள் மாத்திரமே குளிக்கிறார்களா? குளிக்க என்ன ஏற்படு செய்கிறார்களோ, அப்படியே ஞானஸ்நானத்துக்கும் அவர்கள் ஆலயங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. அதிக குளிர் உள்ள தினங்களில் அவர்கள் ஆராதிக்கும் ஆலயங்கள் (Central Heating System) மூலம் உஷ்ணமாக்கப்படுகின்றன. அப்படியே அவர்களை ஸ்நானப்படுத்தும் தண்ணீரையும் சூடாக்கி ஞானஸ்நானம்கொடுக்கின்றனர். 

நன்றி - பாஸ்டர். பாஸ்கர் தாசன்

இதன் தொடர்ச்சியை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.http://www.siluvai.com/2014/01/blog-post_9911.html
Share this article :

14 comments:

Anonymous said...

அந்தக் கள்ளனைப் போல் நீா் இல்லையே, மரணத்தருவாயிலிருந்து அவனுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் அவனும் ஞனஸ்நானம் எடுத்திருப்பான். நீரும் அவ்வண்ணமே சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் தருவாயில் இரட்சிப்படைந்திருந்தீரேயானால் அந்தக் கேள்வியை கேட்பதில் அர்த்தமுண்டு.
இயேசு கிறிஸ்தவர்களுக்கு உதரனமாகவே வாழ்ந்தார். அப்படி இருந்தும் தாங்கள் சோல்லும் கருத்தை பார்த்தால் கூட சரியாகவும் நியாயமாகவும் இல்லையே சரியான வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் தணியாக கடவுள் இடஓதிக்கீடு கோடுத்துள்ளதாக பைபிளில் வசணம் இறுந்தால் கோஞ்சம் காட்டுங்கள் பார்ப்போம்.

Anonymous said...

1 Corinthians 10-2
2 எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.

இந்த வசணத்தில் மூழ்கி ஞானஸ்தானம் பற்றி இல்லையே நன்பரே அவர்களுக்கு இயேசு திரும்ப ஜலத்தினால் ஞானஸ்தானம் கோடுத்தார் என்று பைபிளில் எதாவது வசணம் உள்ளதா நன்பரே சோல்லூங்கள்.

Anonymous said...

மத்தேயு 3-11
11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

இயேசு சிலுவையில் கள்வனுக்கு கோடுத்தது போல்.

Anonymous said...

அப்போஸ்தலர் 19- 1 முதல் 7 வரை
1 அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல்மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:
2 நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
3 அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: ((யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
4 அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். )).
6 அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித்தீர்கதரிசனஞ் சொன்னார்கள்.
7 அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டுபேராயிருந்தார்கள்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
robert dinesh said...

நண்பரே உமது கருத்தை ஒரே கமென்ட் ஆக கொடுத்திருந்தால் பதில் எழுதுவது எனக்கு சுலபமாக இருந்திருக்கும்.

நீர் எழுதியது.---//////சரியான வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் தணியாக கடவுள் இடஓதிக்கீடு கோடுத்துள்ளதாக பைபிளில் வசணம் இறுந்தால் கோஞ்சம் காட்டுங்கள் பார்ப்போம்.////////

ஞானஸ்நானம் பெற வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கள்வன் அதைப் பெறவில்லை. அவனுக்கு இயேசு பரதீசுக்கு போகும் பாக்கியத்தை கொடுத்தார்.உமக்கு வாய்ப்புகள் கிடைத்தும் நீர் அதை புறக்கணித்து வருகிறீர் அதைக்குறித்து சிந்தித்துப் பாரும். அது மட்டுமல்ல கள்வனுக்கு ஞானஸ்நானத்தை பற்றிய அறிவு இல்லாதிருந்திருக்கலாம் ஆனால் உமக்கு அதைப்பற்றிய அறிவு உண்டு அதைப் புறக்கணிக்கும் நீர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

மற்றும்-- நீர் கூறியது--/////1 Corinthians 10-2
2 எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.

இந்த வசணத்தில் மூழ்கி ஞானஸ்தானம் பற்றி இல்லையே நன்பரே அவர்களுக்கு இயேசு திரும்ப ஜலத்தினால் ஞானஸ்தானம் கோடுத்தார் என்று பைபிளில் எதாவது வசணம் உள்ளதா நன்பரே சோல்லூங்கள்.//////
அந்த அதிகாரத்தை முழுவதும் வாசித்துப் பாரும் பழைய ஏற்பாட்டில் நடந்த காரியங்கள் புதிய ஏற்பாட்டின் சத்தியங்களுக்கான நிழலாட்டமான காரியங்கள். அதை வைத்துக் கொண்டு அவர்கள் மூழ்கினார்களா மிதந்தார்களா என்றெல்லாம் கேட்பது அறிவீனம். அவர்கள் மூழ்கவில்லை என்பதற்காக நீரும் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்க மாட்டீர் என்றால் அவர்கள் கடலுக்கு நடுவாக நடந்து சென்றார்கள். நீரும் நடந்து சென்றுவிட்டு ஞானஸ்நானம் எடுத்து விட்டேன் என்று கூறலாமே?


நீர் எழுதியது---//////மத்தேயு 3-11
11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

இயேசு சிலுவையில் கள்வனுக்கு கோடுத்தது போல்.//////

,இயேசு பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்பது உண்மைதான் அதுக்கு என்ன இப்போ? அதற்காக நீரினால் பெற வேண்டிய முழுக்கு ஞானஸ்நானம் தேவையில்லை என்கிறீரா? ஞானஸ்னானம் கொடுக்கும் படிக்கு விசுவாசிகளுக்கு இயேசு கட்டளையிட்டாரே.ஞானஸ்நானம் பெற தேவையில்லை என்றால் ஏன் கொடுக்கும்படி கட்டளையிட வேண்டும்?

மற்றும் கள்வனுக்கு இயேசு பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுத்தார் என்று எந்த வேதத்தில் இருக்கிறது????Paul T Didaskalos said...

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல இனங்களையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள் என்று இயேசு சொன்ன ஒரே ஒரு ராஜரீக வசனத்தின் அடிப்படையில் ஞானஸ்நானம் எந்த அளவுக்கு முக்கியம் என்பது விளங்குது . அதற்க்கு சாட்சியாக கர்த்தரே யோர்தான் நதியில் யோவானிடத்தில் ஞானஸ்நானம் எடுத்து நமக்கு மாதிரியை வைத்து சென்றுள்ளார் மேலும் இதற்க்கு கூடுதல் சாட்சியாக பரலோகத்திலிருந்து பிதாவும் பேசினார் ஆவியானவரும் இறங்கினார் ஆகவே ஒரு விசுவாசிக்கு ஞானஸ்நானம் ரொம்ப ரொம்ப முக்கியம் .
ஆனால் விசுவாசம் இல்லாமல் எடுத்த (எடுக்கும்) ஞானஸ்நானம் ஒரு போதும் அந்த நபரை ரட்சிக்காது என்று தைரியமாக சொல்லுகிறேன் .
நான் இப்படி சொல்வதானால் ஞானஸ்நானதான் ஒருவரை ரட்சிக்குது என்று அர்த்தம் அல்ல . விசுவாசம்தான் ஒருவரை ரட்சிக்குது என்று சொல்ல வருகிறேன் . எப்படியெனில் ஞானஸ்நானம் இல்லாத காலத்தில் வாழ்ந்த நோவா , ஏனோக்கு போன்றோர் விசுவாசத்தின் மூலமே தேவனிடத்தில் நற்சாட்சி பெற்று தேவனை அடைந்தனர் , ஆனால் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்ட இஸ்ரவேலர்கள் ஞானஸ்நானம் எடுத்தும் கர்த்தர் மீது விசுவாசம் இல்லாத காரணத்தினால் தேவனுக்கு பிரியமற்றவர்களாய் தேவனால் வனாந்திரத்தில் அழிக்கப்பட்டனர் . இதிலிருந்து ஞானஸ்நானம் முக்கியமா ? என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டும் என்றால் விசுவாசத்தோடு கூடிய ஞானஸ்நானமே முக்கியம் என்று பதில் சொல்லலாம் . விசுவாசம் இல்லாத ஞானஸ்நானத்தில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை . உயிரில்லாத சரீரத்தை செத்த பிணம் என்று எப்படி சொல்லுகிறமோ அப்படியே மனம் திரும்புதல் இல்லாத அதாவது விசுவாசம் இல்லாத ஞானஸ்நானம் ஒன்றுக்கும் உதவாது . விசுவாசம் பெரிதா ? செயல் பெரிதா என்று கேள்வி கேட்கும்போது செயல் அல்ல விசுவாசமே பெரிது பதில் சொல்லலாம் ஆனால் விசுவாசம் செயலில் வெளிப்படாவிட்டால் தன்னில்தானே செத்ததாய் இருக்கும் . ஞானஸ்நானம் என்பது ஒரு செயல் அதாவது ஒரு கிரியை. கிரியை மட்டும் நம்மை ரட்சிப்பது இல்லை விசுவாசத்தோடு கூடிய கிரியைதான் (ஞானஸ்நானம்தான் )நம்மை ரட்சிக்கும் . ஆமென் !

Raja Sekar said...

ஞானஸ்நானம்--ஞானம்+ஸ்நானம்.- ஸ்நானம் - என்பதற்கு தலை நனைய குளித்தல் என்பது தமிழ் பொருளாகும்.----ஸ்நானம் என்பது வடமொழியாகும்(SANSKRIT).ஞான(ம்) -என்பது ஒரு மனிதன் இங்கு ஆவிக்குரியவனாகி நல்ல்து பகுத்தறியும் நிலையை குறிக்கும்.மாற்கு 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்

robert dinesh said...

நன்றி சகோ.Paul T Didaskalos
நன்றி சகோ.Raja Sekar

kanimozhi.p kani said...

நன்றி பாஸ்டர் மிகவும் உபயோகமாக உள்ளது

Anonymous said...

சிலுவையில் இயேசு செய்தது என்ன ..? அனைத்து பாவங்களுக்காகவும் ஒரே முறை செய்து முடிக்கவில்லையா ..? யோவானிடம் அவர் ஞானஸ்நானம் எடுக்கும்போது கூறுகையில்" இப்போது இடம்கொடு, பின்னாளில் ஒரேதரம் செய்துமுடிக்கிறேன் என்று சொன்னது எதை ..?
ஞானஸ்நானம் அவரின் தியாகத்திற்கு பின்பும் தேவையா..? தேவை என்றால் இயேசு சிலுவையில் சரியாக செய்யவில்லை என்பது அர்த்தமா ...?

robert dinesh said...

///சிலுவையில் இயேசு செய்தது என்ன ..? அனைத்து பாவங்களுக்காகவும் ஒரே முறை செய்து முடிக்கவில்லையா ..? யோவானிடம் அவர் ஞானஸ்நானம் எடுக்கும்போது கூறுகையில்" இப்போது இடம்கொடு, பின்னாளில் ஒரேதரம் செய்துமுடிக்கிறேன் என்று சொன்னது எதை ..?
ஞானஸ்நானம் அவரின் தியாகத்திற்கு பின்பும் தேவையா..? தேவை என்றால் இயேசு சிலுவையில் சரியாக செய்யவில்லை என்பது அர்த்தமா ...?////

சகோதரரே நீங்கள் இந்த கட்டுரையை முழுவதும் வாசித்திருந்தால் இப்படி கேட்க மாட்டீர்கள். இயேசு சிலுவையில் செய்ததுக்கும் இதுக்கும் முடிச்சு போட வேண்டாம். ஏனென்றால் சிலுவையில் எல்லாவற்றயும் செய்த அதே இயேசுதான் ஞானஸ்நானம் கொடுக்கும் படி கட்டளையும் கொடுத்தார்.

வேதாகமத்தை ஒரு முறையாவது வாசித்த எவரும் ஞானஸ்நானம் தேவையா என்று கேட்க மாட்டார்.

Gurug. Joseph said...

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கட்டளையின்படி விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் (தண்ணீரில் மூழ்கி) எடுப்பது மிக மிக மிக மிக மிக மிக மிக முக்கியம்.

Anonymous said...

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கட்டளையின்படி விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் (தண்ணீரில் மூழ்கி) எடுப்பது மிக மிக மிக மிக மிக மிக மிக முக்கியம்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்