Home » , , » தீமேத்தேயு பற்றிய விபரங்கள். (வேதாகமத்திலிருந்து) about timothy

தீமேத்தேயு பற்றிய விபரங்கள். (வேதாகமத்திலிருந்து) about timothyதீமோத்தேயு (தேவனால் கனம் பண்ணப்பட்டவர்)
வேதாகமத்திலிருந்து தீமேத்தேயு பற்றி நாம் தெரிந்து கொள்ளக் கூடிய விபரங்கள்.

        தீமோத்தேயுவின் தாய் - யூதர் (ஐனிக்கேயாள்). 
        தீமோத்தேயுவின் தந்தை - ஒரு கிரேக்கர் (பெயர் குறிப்பிடப்படவில்லை). 
        தீமோத்தேயுவின் பாட்டி - லோவிசாள். 
        சம்பந்தப்பட்ட இடங்கள் - லீஸ்திரா, எபேசு, மற்றும் பவுலடிகள் சென்ற இடங்கள்.


வேதாகமத்தின் புதியஏற்பாட்டில் சிறந்த முன்மாதிரியான ஒரு ஊழியக்காரனாக இருப்பவர் தீமோத்தேயு. இவர் வாலிபப் பிராயத்திலிருந்து ஊழியம் செய்பவராயிருந்தார்.(1தீமோ-4:12) இவர் பவுலின் ஊழியத்தில் உருவக்கப்பட்டவர்.

ஒவ்வொரு ஊழியர்களும் தமக்குப் பின்னர் ஊழியத்தை தொடர்ந்து நடத்துவதற்கு ஆவிக்குரிய தீமோத்தேயுக்களை உருவாக்க வேண்டும்


'நான் தீமோத்தேயுவைப் போல உருவாக வேண்டும்' என்று விரும்புபவர்கள் தங்கள் தலைவனுடன் இணைந்து ஊழியத்தில் பங்கேற்று உதவிகள் செய்பவராகவும், பாடுபடுபவராகவும், ஜெபிப்பவராகவும் காணப்பட வேண்டும்.
தீமோத்தேயுவின் முன்மாதிரி   (நற்பண்புகள்)

   •     பவுல் அவர்களின் ஊழியத்தையும் அவரின் பாடுகளையும் பற்றி நன்கு தெரிந்து கொண்டே பவுலடிகளாருடன் இணைந்து ஊழியப்பயணம் செய்வதற்கு தன்னை ஒப்புக் கொடுத்தார்.

   •     இதற்கு முதற் கட்டமாக விருத்தசேதனம் செய்யப்படவும் சம்மதித்தார்.

   •     பவுலடிகளின் உடன்வேலையாளாயிருந்தார்.

   •     பவுலைப் போலவே ஊழியம் செய்பவராயிருந்தார்.

   •     பவுலடிகளார் தன்னை அனுப்பிய இடங்களுக்கெல்லாம் கீழ்ப்படிதலுடன் சென்றார்.

   •     பல சபைகளை சந்தித்து அவர்களுக்கு போதித்தார்.

   •     பவுலடிகளாருடன் சேர்ந்து நிரூபங்களை எழுதினார்.

   •     சபைகளுக்காக ஊக்கமாக ஜெபிப்பவராக இருந்தார்.

   •     எபேசு சபையின் போதகராக செயற்பட்டார், நற்செய்திப்பணி செய்தார்.

   •     மிகவும் உத்தமராக நடந்து கொண்டார்.

ஆதார வசனங்கள்
அப்-16:1 அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்தீராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான். அவன் தாய் விசவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.

அப்-16:3 அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள் நிமித்தம்  அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.

1தீமோ-4:12 உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு,  நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.

2தீமோ-1:5 அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.

1கொரி-4:17 இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன். நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.

1கொரி-16:10-11 தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள். என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே. ஆனபடியால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக. சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.

2கொரி-1:1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்துபட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயாநாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:

2கொரி-1:19 என்னாலும், சில்வானுவினாலம், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்.

பிலி-1:1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:

பிலி-2:19-23 அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.
20. அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை.
21. மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
22. தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.
23. ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்.

கொலோ-1:1-2 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
2. கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

1தெச-1:1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

1தெச-3:1-7 1. ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல் அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து,
2. இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.
3. இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
4. நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்ளூ அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.
5. ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினது உண்டோவென்று,  உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்.
6. இப்பொழுது தீமோத்தேயு உங்களிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும் அன்பையும் குறித்தும், நீங்கள் எப்பொழுதும் எங்களைப் பட்சமாய் நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்களென்பதைக்குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே,
7. சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களைக் குறித்து ஆறுதலடைந்தோம்.

2தெச-1:1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:

 பிலே-1:1-2 கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும்,
2. பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:

எபி-13:23 சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக. அவன் சீக்கிரமாய் வந்தால், அவனோடேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன்.

ரோம-16:21 என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

-------------------by Robert dinesh-------------------
Share this article :

1 comments:

Lieon Jebadurai.A said...

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்