Home » , » குட்டையை குழப்பி விடும் நமது பேச்சு முறைகள் - நமது தவறான பேச்சு முறைகள்

குட்டையை குழப்பி விடும் நமது பேச்சு முறைகள் - நமது தவறான பேச்சு முறைகள்

நமது தவறான பேச்சு முறைகள்
யாகாவா ராயினும் நாகாக்க”

குடும்பங்களுக்குள்ளும் கூட்டங்களுக்குள்ளும்  பிரிவினைகள் ஏற்பட அதிக காரணமாயிருப்பது வாயின் வார்த்தைகள்தான். எவ்வளவோ சந்தோஷமாக இருந்த குடும்பம் கூட ஒரேயோரு வார்த்தையினால் பிரிந்து விடும். ஒரு பெரிய காட்டையே கொழுத்தி சாம்பலாக்கி விடும் சக்தியுள்ள தீப்பொறி போன்றது நாவு.
யாக்கோபு-3:5 அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது!

!!!! குட்டையை குழப்பி விடும் நமது பேச்சு முறைகள் !!!!
எப்படியெல்லாம் நாம் பேசக் கூடாது என வேதம் தெளிவாக நமக்கு கற்றுத்தருகிறது. அது குறித்துப் பார்ப்போம்…


01 மற்றவர்களை எப்போதும் தாழ்த்தி பேசுதல்
நீதிமொழிகள்-11:12 மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான், புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.


02 மற்றவர்களின் குறைகள்,தவறுகளை குத்தி காட்டி பேசுதல்
நீதிமொழிகள் -26:9 மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி, வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.

ஒரு வெறியனின் கையில் ஒரு முள்ளு கிடைத்தால் அவன் அதைக் கொண்டு எல்லாரையும் குத்தி வேதனைப்படுத்திக் கொண்டு திரிவான். அதேபோல ஒரு மூடன் தன் வாயில் கிடைத்த பழமொழியைக் கொண்டு எல்லோரையும் குத்தி பேசுவான் என்கிறது இவ்வசனம்.


03 நம்மை எப்போதுமே உயர்த்தி பெருமையாக பேசுதல்
நீதிமொழிகள் -27:2  உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும், உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.

யாக்கோபு-3:5  அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது!


04 ஒருவர் இல்லாதவிடத்து அவரைப்பற்றி தவறாக பேசுதல்-       புறங்கூறுதல்
நீதிமொழிகள் -10:18  பகையை மறைக்கிறவன் பொய் உதடன், புறங்கூறுகிறவன் மதிகேடன்.
நீதிமொழிகள் -25:23  வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
சங்கீதம்-15:3  கர்த்தருடைய வீட்டில் தங்க தகுதியுள்ளவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.


05 மற்றவரின் கருத்தை முழுமையாக கேட்டு அறியாமல் 'இப்படித்தான் நடந்திருக்கும்' என்று நாமே ஒன்றை கற்பனை செய்து விட்டு பேசுதல்
யாக்கோபு-1:19  ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்,


06 கோள் சொல்லுதல்
நீதிமொழிகள் -16:28  மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான், கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
நீதிமொழிகள் -26:20  விறகில்லாமல் நெருப்பு அவியும், கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.


07 ஊர் வம்பு பேசுதல்
நீதிமொழிகள் -11:9  மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான், நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.
சங்கீதம்-73:9  தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள், அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.


08 வாக்குவாதங்கள்
ஆதியாகமம்-13:8  ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம், நாம் சகோதரர்.
ஆபிரகாம் மூத்தவராயிருந்தாலும் லோத்துவுக்கு விட்டுக் கொடுத்தார். நமக்கெதுக்கு வாக்குவாதம்? விட்டுக் கொடுப்போமே!!


09 அவசரப்பட்டு முன்யோசனையின்றி பேசுதல்
பிரசங்கி-5:2  தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.


!!!! சில வேளைகளில் நம்ம வாய மூடுறது நல்லது !!!!

நீதிமொழிகள் -17:28   பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான், தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
நீதிமொழிகள் -10:19   சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது, தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
நீதிமொழிகள் -18:7   மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.


கடிந்து கொள்ளுதல் நல்லது

நீதிமொழிகள் -28:23  தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.


!!!! ஐயோ தெரியாம பேசிட்டேனே !!!!

பிரசங்கி-5:6   உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?


நீதிமொழிகள் -18:21   மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும், அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.


-----------------------------by- Robert Dinesh-----------------------------
Share this article :

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்